திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2,143 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் திருப்பூரில் இதுவரை 1,431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல, கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் திருப்பூரில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 658 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மாவட்டத்தை தொடர்ந்து, தற்போது திருப்பூரிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.