திருப்பூர் சிவன் மலையில் பிடிப்பட்ட அறிய வகை ஆசிய மர நாய்..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், சிவன் மலை அருகே அறிய வகையான விலங்கு ஒன்று தென்பட்டதுள்ளது. இதனை, பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு விரைந்த வனத்துறையினர் அவ்விலங்கை மீட்டனர். விசாரணையில் அழிந்து வரும், இனமான ஆசிய மர நாய் என்று தெரிய வந்துள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், சிவன் மலை அருகே அறிய வகையான விலங்கு ஒன்று தென்பட்டதுள்ளது. இதனை, பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு விரைந்த வனத்துறையினர் அவ்விலங்கை மீட்டனர். விசாரணையில் அழிந்து வரும், இனமான ஆசிய மர நாய் என்று தெரிய வந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சிவன் மலை உள்ளது. கோவிலின் கிரிவல பாதையில் வினோத ஒலியை எழுப்பிய அரிய வகை விலங்கு இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டனர் .

மேலும், அதிகாரிகள் கூறுகையில், இவ்வகை ஆசிய மர நாய் இனம் 3 லிருந்து 4 வயது இருக்கும். அந்த மலையில் உள்ள பழங்களை சாப்பிட வந்திருக்கலாம் என்றனர்.

மேலும், 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இவை அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ளதாக தெரிவித்தனர். ஆசிய மர நாய், சிறு பறவைகளையும், எலி, சிறுசிறு ஊர்வனங்களை உண்டு வாழும் பாலூட்டி வகையை சார்ந்தது. இரவு நேரங்களில் வேட்டையாடும் இரவாடி விலங்கு ஆகும்.

மர நாய்கள் பொதுவாக அடர்ந்த காடுகளில் தான் காணப்படும். எனினும் அடர்த்தி குறைந்த பகுதியில் சிறிய எண்ணிக்கையில் இங்கு வாழ்கிறது.

பிடிப்பட்ட ஆசியன் மர நாயை, ஊதியூர் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் விடப்படும், என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...