பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டில், ஈடுபட்ட 2 பட்டதாரி வாலிபர்கள் கைது

கோவை: பொள்ளாச்சி நகர மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதை, தொடர்ந்து பொள்ளாச்சி டிஎஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கோவை: பொள்ளாச்சி நகர மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதை, தொடர்ந்து பொள்ளாச்சி டிஎஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலக்காடு ரோடு ஆர்.பொன்னாபுரம் பிரிவு அருகே தாலுகா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்ததில், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அன்சார்முகமது (22), (ஆட்டோமொபைல் டிப்ளமோ பட்டதாரி), அதே பகுதியை சேர்ந்த நவாஸ் ஷெரீப் (22), (பி.காம் பட்டதாரி), ஆகிய இருவரும் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால், பல்வேறு இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.



இதையடுத்து, அவர்களிடம் இருந்து நான்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களை தாலுகா போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தாலுக்கா போலீசார், இருவரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவிநாசி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...