கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பயனற்று கிடக்கும் மறு சுழற்சி பணிகள்..!

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் பணிகளை காலந்தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் பணிகளை காலந்தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளொன்றுக்கு சேகரமாகும் சுமார் 1,200 டன் அளவிலான குப்பைகள் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இப்படி இப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 20 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கி உள்ளது.

இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரித்து கழிவு மக்க செய்ய, கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 60.11 கோடியில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் திட்டத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

ஆனால், ரூ.60.11 கோடியில் நிதி ஒதுக்கிய நிலையில், தற்போது வரையிலும் ஒப்பந்ததாரர் சார்பில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் மறு சுழற்சி செய்யும் எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை.

மேலும், வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்க, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 69 இடங்களில் சிறு மறுசுழற்சி மையங்கள் (மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்) தற்போது கட்டப்பட்டு வருவதாகவும், அதில் 12 மையங்கள் முழுமையாக கட்டப்பட்டு உள்ளதாகவும் இதனால் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குப்பைகள் சேர்வது பெரும் அளவில் குறைக்கப்படும் என்றும் கோவை மாநகராட்சி சார்பில் கடந்த ஜூலை 8ம் தேதி கூறப்பட்டது.

ஆனால், மாநகராட்சி அறிவித்தபடி இன்று வரையிலும், இன்னும் ஒரு மையத்தில் கூட, இந்த மறு சுழற்சி பணிகள் தொடங்கப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த மறு சுழற்சி மையங்கள் எந்த ஒரு பயனுமின்றி பயன்படுத்தப்படாமல் உள்ளது.

எனவே, வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் பணிகளை காலந்தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் வெள்ளலூர் பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...