நெசவாளி தற்கொலைகளுக்கு தமிழக அரசு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை; போதிய நிவாரணம் வழங்க - தமிழ்நாடு நெசவு தரிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை

கோவை: கொரோனா தாண்டவத்தால் நெசவாளர்கள் வறுமையால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தமிழக அரசு இனியாவது மௌனம் கலைந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு நெசவு தரிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை: கொரோனா தாண்டவத்தால் நெசவாளர்கள் வறுமையால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தமிழக அரசு இனியாவது மௌனம் கலைந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு நெசவு தரிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து, இரங்கல் மற்றும் ஆலோசனை கூட்டம், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையில், இன்று, தமிழ்நாடு நெசவு தரிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக நடைபெற்றது.

கொரோனோ கோரத்தாண்டவம் காரணமாக வேலை இழந்து வறுமையால் தவித்து வநத நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற.நெசவாளர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்து, அதில் கணவன் மனைவி இருவரும் மரணித்து விட்டனர்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திலும் பூவேஸ் என்ற இளம் நெசவாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால், நெசவாளர்கள் மத்தியில் கொரோனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், வறுமையால் உயிரிழந்த நெசவாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம், தமிழ்நாடு நெசவு தரிக்காரர்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் வச்சினம்பாளையத்தில் இன்று நடைபெற்றது.

அந்த இயக்கத்தின் தலைவர், தேவராஜ் தலைமையில், சிறுமுகை கைத்தறி நெசவாளர்கள், வறுமையால் தற்கொலை செய்து கொண்ட நெசவாளர்களுக்கு மலர்தூவி தங்களது அஞ்சலிகளை செலுத்தினர். பின்னர், இரங்கல் கூட்டமானது நடைபெற்றது.

இதில், நெசவாளர்களுக்கு அரசு கொரோனா காலகட்டத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறியதால், வறுமையால் தற்கொலை செய்யக் கூடிய அளவுக்கு நெசவு குடும்பங்கள் இருப்பதை, இந்த சம்பவங்கள் காட்டுவதாக ஒவ்வொருவரும் வேதனை தெரிவித்தனர்

நெசவாளி, தற்கொலை செய்துகொண்ட போதும்கூட தமிழக அரசு அதற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை, என குற்றம்சாட்டிய நெசவாளர்கள், இனியாவது தமிழக முதல்வர் வறுமையால் உயிரிழந்த நெசவாளர் குடும்பங்களுக்கு போதிய நிதி உதவி அளித்து அவர்களது குழந்தைகளுக்கு நல்லதொரு கல்வி அளிக்க வேண்டும், என இந்த இரங்கல் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்கத்தின் மாநில தலைவர் தேவராஜ்:

தமிழ்நாடு முழுவதும் 2 கோடி நெசவுத் தொழிலாளர்கள் உள்ள நிலையில் அவர்களைப் பாதுகாக்க ஏழு அம்ச கோரிக்கையை முன் வைத்தோம், ஆனால் அதற்கு அரசு இதுவரை பதில் தரவில்லை.

இதே நிலை தொடர்ந்தால், மேலும் தற்கொலைகள் அதிகரிக்கும். எனவே, அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அண்டை மாநிலமான தெலுங்கானாவில், நெசவாளர்களுக்காக ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் குறைந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டு வருவதாக கூறியவர், நெசவாளர்களை உரிய கணக்கெடுப்பு நடத்தி இந்த நோய் காலகட்டத்தில், தமிழக நெசவாளர்களுக்கு போதிய நிவாரணம் அளிக்க வேண்டுமென தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...