திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவரை ஒருமையில் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேசிய சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் செல்வி. இவருடைய கணவர் ரமேஷ் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அதே பகுதியில் ஆறாவது வார்டு ஊராட்சி உறுப்பினராக இருப்பவர் குப்புசாமி. இவர் பஞ்சாயத்து அலுவலக பணியில் இருந்தபோது செல்வியை தகாத முறையில் ஜாதியை சொல்லி திட்டியதாக தாராபுரம் காவல் நிலையத்தில் குப்புசாமி என்பவர் மீது புகார் கொடுத்திருந்தார்.
ஆனால், அந்த புகாரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்ததை அடுத்து குப்புசாமி என்பவர் மீது தாராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், குப்புசாமி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்ததோடு, வேறு எந்த விசாரணையையும் காவல்துறையினர் மேற்கொள்ளவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து மேற்கொண்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் இன்று தேசிய சமூக நீதிப் பேரவை சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், மேற்கண்ட புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், குப்புசாமி, தேவா ஆகிய 3 பேரும் தங்களை தனியார் மண்டபத்தில் வைத்து மிரட்டியதாகவும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.