சிறுமுகையில் புதிய வகை பட்டு சேலைகளை அறிமுகப்படுத்தியுள்ள நெசவாளர்கள்; மக்கள் கைத்தறி உற்பத்திகளை வாங்க வேண்டும் என வேண்டுகோள்

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது, இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது, இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு, கொரானோ காலகட்டத்தில் இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஏராளமான பொதுமக்கள் உற்பத்தி விலைக்கே புடவைகளை வாங்கி பயன் பெற்றனர்.

இதனால், வேலைய்ப்பின்றி நெசவாளர்கள் முடங்கியிருந்த சூழ்நிலையில் உற்பத்தியாளர்களின் இந்த அறிவிப்பு நெசவாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பினை அளித்தது.

தற்போது, அங்குள்ள நெசவாளர்கள் திருமண விசேஷங்களில் பெண்களால் அதிகம் உடுத்தப்படும், சாப்ட் சில்க் எனப்படும் இடை குறைவான, மென்மை பட்டு சேலைகளை உற்பத்தி செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவ டிசைன்கள் கொண்ட பட்டுப் புடவைகள்அறிமுக விழா இன்று சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் மூலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கைத்தறி தொழிலை மேம்படுத்தும் விதமாக எதிர்வரும் திருமண விஷயங்களுக்காக புதிய டிசைன்களில் செய்யப்பட்ட திருமணப்பட்டுப் புடவைகள் மற்றும் பல வண்ணங்களில், பல வித டிசைன்களில் தயாரிக்கப்பட்ட சாப்ட் சில்க் சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

மேலும், நெசவாளர்களுக்கு கொரோனாவால் வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில் பொதுமக்கள் கைத்தறி உடைகளை வாங்கி, அவர்கள் வாழ்க்கை மேம்பட உறுதுணையாக இருக்க வேண்டும், என சிறுமுகை பட்டு உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...