கொரோனா நோயாளிகளுக்காக 100 படுக்கைகள், மொத்தைகளை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கிய கோவை தனியார் நிறுவனம்

கோவை: கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்கள் பயன் பெறும் வகையில், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் இன்று ஆறு லட்சம் மதிப்பிலான 100 படுக்கைகள், தலையணை, மொத்தைகள், படுக்கை விரிப்புகளை, மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.

கோவை: கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்கள் பயன் பெறும் வகையில், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் இன்று ஆறு லட்சம் மதிப்பிலான 100 படுக்கைகள், தலையணை, மொத்தைகள், படுக்கை விரிப்புகளை, மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். 

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிதித்து வரும் நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொடிசியா வளாகம் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகத்தை ஊக்குவிக்கும் மற்றும் பளுவை குறைக்கும் பொருட்டு பல்வேறு, தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு பயன்பெறும் வகையில் படுக்கைகள், மெத்தைகள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக, துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள சக்தி ஆட்டோ ஆன்சிலரி நிறுவனம் தங்களது நிறுவனம் சார்பில் கொடிசியாவில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு 100 படுக்கைகள் வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம் கொடிசியாவில் உள்ள கொரோனோ சிகிச்சை மையத்திற்க்கு 100 கட்டில், மெத்தை, தலையனை, மற்றும் போர்வைகள் என ஆறு லட்சம் மதிப்பலான பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிடம் வழங்கினர்.

இந்த நிகழ்வின் போது, வடக்கு வட்டாச்சியர் மகேஷ்குமார், துணை வட்டாச்சியர்கள் நவநீதகிருஷ்ணன், மனுவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...