நிறை மாத கர்ப்பிணிப் பெண்களை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுக்கும் போக்கு ஆபத்தானது - எம்பி, பி.ஆர்.நடராஜன்

கோவை: பிரசவத்திற்காக வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறை மாத கர்ப்பிணிப் பெண்களை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுக்கும் போக்கு அதிகரித்து வரும் விவகாரத்தில், உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும், என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை: பிரசவத்திற்காக வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறை மாத கர்ப்பிணிப் பெண்களை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க மறுக்கும் போக்கு அதிகரித்து வரும் விவகாரத்தில், உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும், என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிகளைப் பிரசவத்திற்கு அனுமதிக்க மறுக்கிறார்கள், என்கிற புகார் என்னுடைய கவனத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கையில், எங்களிடம் வரும் கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் இருந்து எங்கள் மருத்துவ ஆலோசனைப் பெறாதவர்கள். ஆகவே, இவர்களின் நிலை குறித்து எங்களுக்குத் தெரியாமல் எப்படி பிரசவம் பார்ப்பது என்கிறார்கள். 

மேலும், அழுத்தம் கொடுத்தால் இங்கு இடமில்லை என்கிறார்கள். இது குறித்து, மேலும் விசாரிக்கையில், மகப்பேறு மருத்துவர்கள் பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டு இல்லாததே இதற்கு காரணம் என்பது தெரியவருகிறது.

இரட்டை உயிர்கள் சம்பந்தப்பட்ட நிறைமாத கர்ப்பிணிகள் விவகாரத்தில், தனியார் மருத்துவமனைகளின் செயல் மிகவும் ஆபத்தான போக்காகும். 

எனவே, இதனை, மாவட்ட ஆட்சியர் அவசியம் கருதி உடனடியாக தலையிட்டு தக்க நடவடிக்கை எடுப்பதோடு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுக்குத் தேவையான தனி ஏற்பாடுகளை மருத்துவர்களின் ஆலோசனைகளைப்பெற்று செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...