நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றுடைய நபர்கள் வெளியே சென்று வருவதால் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கூக்கல்தொரை பகுதியில் 34 பேருக்கும், கோத்தகிரி பகுதியில் 18 பேருக்கும், திம்பட்டி பகுதியில் 6 பேர் மற்றும் தாந்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொற்று உறுதியாகியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இன்று 29 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 1,070 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மேலும், 322 பேர் மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, நீலகிரியில் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.