கோவை: தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் மாநில துணை செயலாளர், நாகராஜ் சார்பாக கோவை மண்டலம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தலைமை பொறியாளருக்கு மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் கூறியிருப்பதாவது :
20 ஆண்டுகளாக மின்வாரியத்தில், ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரிய ஒப்புதல் வழங்க வேண்டும். தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அடையாள அட்டை வழங்கி, ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ 380 வழங்கிட வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்யாமல், கேங்மேன் என்னும் புதிய பதவிகளை மின்வாரியத்தில் களப்பணி பிரிவில் புகுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இதனால் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பாதிக்கப்படுவார்கள். இந்த முயற்சியை கைவிட வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.