கோவை மாநகர் பகுதிகளில் மிதிவண்டி ஓடுதளங்கள் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா? மாநகராட்சி கருத்துக்கேட்பு

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிதிவண்டிகளின் தற்போதைய பயன்பாடு குறித்து இணையம் மூலமாக கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.








கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிதிவண்டிகளின் தற்போதைய பயன்பாடு குறித்து இணையம் மூலமாக கருத்துகள் கேட்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் உள்ள குளக்கரைகளில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி ஓடுதளங்கள், நடைப்பயிற்சித் தளங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மிதிவண்டிகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதிவண்டிகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதற்கான வசதிகள், இடையூறுகள் குறிந்து அறிந்து கொள்ளும் விதமாக, மாநகராட்சி சார்பில், இணைய தளம் மூலமாக கருத்துக் கேட்பு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மீண்டும் கோவை மாநகர் பகுதிகளில் மாநகராட்சி மூலமாக, மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் மிதிவண்டிகள் பயன்படுத்தும் திட்டம் துவங்க வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகர் பகுதிகளில் மிதிவண்டி ஓடுதளங்கள் அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்பது குறித்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் மிதிவண்டிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும், இடையூறுகளை அறிந்து கொள்ளவும் சைக்கிள்ஸ் 4 சேன்ஜ் என்ற பெயரில் மிதிவண்டிகளின் பயன்பாடு குறித்த கருத்துக் கேட்பு, இணைய தளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

இந்த கருத்துக்கேட்பில் பங்கேற்க https://forms.gle/2WZawdfdQWHUfiY27 என்ற இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்யலாம்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...