கோவை: பொள்ளாச்சியில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், சார்-ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் நகராட்சி ஆணையாளர், காந்திராஜ், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை பகுதி வட்டாட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, கூட்டத்தில் பேசிய பொள்ளாச்சி சார் ஆட்சியர்:
பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில், கொரோனா நோய்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம், தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்பகுதிகளில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தினமும், கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலை கண்டறிய அனைத்து பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாலை 4 மணிக்குள் மருத்துவ முகாம் குறித்த விவரங்களை சார் ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கவேண்டும். தற்போது பொள்ளாச்சி பகுதியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என களப் பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது.
எனவே, அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க பொள்ளாச்சியில்,, அனைத்து வசதிகளுடன் கூடிய தனியார் மருத்துவமனை ஒன்றை இந்திய மருத்துவ சங்கம் தேர்வு செய்ய வேண்டும்.
நோய் பாதிக்கப்பட்ட நபர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முற்றிலும் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
இதை, அங்குள்ள மருத்துவக்குழு முறையாக கண்காணிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் 100% முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். முக கவசம் அணியாமல், வரும் நபர்களுக்கு ரூ. 200 அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.