பொள்ளாச்சி அருகே விவசாய நிலங்களை மாசுப்படுத்தும், தென்னை நார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் மனு

கோவை: பொள்ளாச்சி அருகே விவசாய நிலங்களில், தென்னை நார் கழிவு நீர் வெளியிடும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் இன்று சார்-ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: பொள்ளாச்சி அருகே விவசாய நிலங்களில், தென்னை நார் கழிவு நீர் வெளியிடும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் இன்று சார்-ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள திம்மங்குத்து பகுதியில், தனியார் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, வெளியேற்றப்படும் தென்னைநார் கழிவு மற்றும் கழிவு நீரை அருகில் உள்ள விவசாய நிலங்களில் திறந்து விட படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதி விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்; திம்மங்குத்து பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. குறிப்பாக, மழை காலங்களில், விவசாய நிலங்களின் மீது கொட்டப்பட்டிருக்கும் காயர் பித்தின் மீது விழும் நீர், கழிவு நீராக மாசுபட்டு, நிலத்தடியில் இறங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துத்கிறது.

மேலும், இந்த கழிவுநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து ஆழியார் ஆற்றில் கலப்பதால், ஆற்றின் இருபுறமும் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில், இந்த ரசாயனம் கலந்த நீர் கலக்கிறது.

இந்நிலையில், அந்த பகுதியில் மேலும் ஒரு தென்னை நார் தொழிற்சாலை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் இத்தகைய தென்னை நார், தொழிற்சாலைகளை முறையாக ஆய்வு செய்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அம்மனுவில் தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...