கோவை கருமத்தம்பட்டி அருகே வீட்டின் பின்வாசலை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.7000 ரொக்கம் கொள்ளை - போலீசார் விசாரணை!

கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே வீட்டின் பின்வாசலை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ஏழாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே வீட்டின் பின்வாசலை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ஏழாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் நாதன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை செந்தில்நாதன், அவரது மனைவி கலாவதி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளனர். திருமணம் முடிந்து இன்று காலை அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு படுக்கை அறையில் உள்ள பீரோக்கள் திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே வீசப்பட்டு இருந்தது. மேலும், படுக்கை அறையில் இருந்த பீரோவில் 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.7,000 ரொக்கம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் வீட்டின் பின்பக்கம் வழியாக கொள்ளையர்கள் உள்ளே வந்தது தெரியவந்துள்ளது.



மேலும், படுக்கை அறையில் பீரோ சாவி இருந்ததால் சுலபமாக பீரோவை திறந்து நகை பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அங்கு பதிவான கை ரேகைகளை கொண்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகளா அல்லது வேறு யாரேனும் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...