கோவை: அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் இணையதள பதிவு குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்து கொண்டால் பல்வேறு அரசு நிதி உதவிகளும், நலத்திட்ட உதவிகளும் கிடைக்கும். ஆனால், இதனை பதிவு செய்வதற்கு தொழிலாளர்கள் மாவட்ட தலை நகரங்களில் அமைந்துள்ள நல வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டும்.
இதனை எளிமைப் படுத்துவதற்கு கடந்த 2013ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தொழிலாளர்கள் இணையதளம் மூலம் வாரியங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்து, ஆன்லைன் பதிவு கடந்த ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.
ஆனால், ஆன்லைன் பதிவு முறை நடைமுறைக்கு வந்து 60 நாட்கள் ஆன நிலையிலும் ஆன்லைன் பதவிக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்த படவில்லை என்றும் வாரம் ஒரு புதிய உத்தரவு பதிவிற்கான புதிய வடிவம் என மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் குழப்பமும் பதிவு செய்ய முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த குழப்பங்களை எல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.