ஊரடங்கு நாளில் டாஸ்மாக் செயல்படுவதை வீடியோ எடுத்த கோவை பாமக இளைஞரணி துணை செயலாளர், பணம் கேட்டு மிரட்டுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டு

கோவை: கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லாம்பாலையம் பகுதியில் நேற்று ஊராடங்கு விதியை மீறி, டாஸ்மாக் கடை செயல்படாததால் அதை வீடியோ எடுத்ததற்காக, தனது அலைபேசியை பறித்து மதுபான கடை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று, கோவை பாமக மாநில இளைஞரணி துணை செயலாளர், அசோக் ஸ்ரீநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை: கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லாம்பாலையம் பகுதியில் நேற்று ஊராடங்கு விதியை மீறி, டாஸ்மாக் கடை செயல்படாததால் அதை வீடியோ எடுத்ததற்காக, தனது அலைபேசியை பறித்து மதுபான கடை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று, கோவை பாமக மாநில இளைஞரணி துணை செயலாளர், அசோக் ஸ்ரீநிதி குற்றம் சாட்டியுள்ளார். 

இதற்கு, மறுப்பு தெரிவிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள், அவர் ரூபாய் 10,000 பணம் கேட்டு மிரட்டியதாக, தெரிவித்துள்ளனர். இது குறித்து, இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

கோவையில் பாமக மாநில இளைஞரணி துணை செயலாளராக இருப்பவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் நேற்று நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையில் ஊரடங்கை மீறி சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில், அங்கு வீடியோ எடுக்க சென்றுள்ளார். 

அப்போது, தடையை மீறி டாஸ்மாக் செய்யல்படுவதை அவர் வீடியோ எடுத்ததாக கூறப்படும் நிலையில், அந்த டாஸ்மாக் மதுபான ஊழியர்களிடம் அவர் ரூபாய் 10,000 கேட்டு மிரட்டியதாக, டாஸ்மாக் தரப்பில் சொல்லபடுகிறது. 

இந்த நிலையில், அசோக் ஸ்ரீநிதியை தாக்கிய, டாஸ்மாக் ஊழியர்கள் அவரது பிடுங்கி கொண்டு, அவரை தகாத வார்த்தைகளில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 



இதை தொடர்ந்து, அசோக் ஸ்ரீநிதி தன்னுடைய அலைபேசியை திருப்பி தருமாறு கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அலைபேசியை மதுபான கூட ஊழியர் எடுத்து செல்வதும், அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் புகார் அளிக்க காவல் நிலையம் செல்ல கூறுவதும், அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, அசோக் ஸ்ரீ நிதியிடம் கேட்டபோது, ஊரடங்கு காலத்தில், துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை திறந்து இருந்ததால், துடியலூர் காவல் நிலையத்தில் சென்று தகவல் தெரிவித்துவிட்டு, அதனை நிரூபிக்க டாஸ்மாக் கடை திறந்து இருப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கும் போது, டாஸ்மாக் கடை ஊழியர்கள் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு தன்னை தாக்க முற்பட்டதாக, தெரிவித்துள்ளார்.

இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறுகையில், காரில் பாமக கொடியுடன் வந்த அசோக் ஸ்ரீநிதி, அவர்களிடம் பத்தாயிரம் ரூபாய், கேட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் பணம் தர மறுத்ததால், அது வாக்குவாதமாக மாறியது, என்றனர். 

இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்யும், அந்த வீடியோ காட்சிகளில், டாஸ்மாக் ஊழியர் ஒருவர் நீ கேட்கும்போதெல்லாம் பணம் தர வேண்டுமா? என்று கேட்கும் ஆடியோ அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.



மேலும், இது குறித்து அவர் தரப்பில் என்ன நடந்தது என்று விளக்கம் அளித்துள்ள அசோக் ஸ்ரீநிதி: நான் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்கு தீர்வு கண்டு வந்துள்ளேன். நொய்யலில் மணல் கொள்ளையை தடுத்தேன். இதற்கு, என் மீது போலி வழக்குகள் போடப்பட்டது. அதே போல், கோவையில் தடாகத்தில் நடந்து வரும் மண் கொள்ளையையும் தடுத்து, அதற்கு என் மீது போலி வழக்கு போடப்பட்டு 15 நாட்கள் சிறை சென்றேன். 

ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சட்டவிரோதமாக டாஸ்மாக் கடை திறந்திருந்தனர். மாலை நேரம் நடை பயிற்சிக்கு சென்ற போது, கடை திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். 

அதை என் மொபையில் போனில் புகைப்படம் எடுத்து காவல் நிலையத்திற்கு தெரிய படுத்தினேன். இதை பார்த்த டாஸ்மாக் ஊழியர்கள், உடனே அவர்களின் முதலாளிக்கு தகவல் கொடுத்தனர். அவர் என் நண்பர்கள் மூலமாக என்னை தொடர்பு கொண்டு, "சட்டவிரோதமாக, டாஸ்மாக் கடை திறந்து இருப்பது அனைவருக்கும் தெரியும்,. அனைவருக்கும் பணம் செல்கிறது, என்று கூறினார்". 

மேலும், நாங்கள் அவர்களிடம், பணம் இது நாள்வரை வாங்கியது இல்லை, என்று ஆணி தரமாக கூறினேன். எங்களை, மது வாங்கிக்க சொல்லி வற்புறுத்தினார். நான் மது அருந்தும் பழக்கம் உடையவன் இல்லை என்றும் கூறினேன். 

இதே நேரத்தில், நான் தொடர்ந்து காவல் துறையினரை, அந்த டாஸ்மாக் பாருக்கு வர சொல்லி அழுத்தம் கொடுத்து வந்தேன். பிறகு, போலீஸ் அங்கு வரப்போவதை அறிந்து, நான் என் வீட்டிற்கு சென்று காரை எடுத்து கொண்டு அந்த டாஸ்மாக் கடைக்கு சென்றேன்.

அங்கே, வந்த கான்ஸ்டபில் ஒருவர் திறந்து இருந்த கடை முன்பே நின்று கொண்டு கடை திறக்கவில்லை என்றார். அப்போது, நான் வீடியோ எடுக்கவா என்று சொல்லி கொண்டு, வீடியோ எடுக்க முயன்ற போது போலீஸ் உதவி உடன் எனது போனை பறித்து கொண்டனர். 

இப்போது, அதே வீடியோவை எடிட் செய்து ஆடியோவை வைத்து அவதூறு பரப்பி வருகின்றனர். என் பெயரை கலங்கப்படுத்த, இது மாதிரி செய்து வருகின்றனர், என் விளக்கம் அளித்து உள்ளார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...