ஆம்புலன்ஸில் வந்து 90 வயது மூதாட்டி கோவை ஆட்சியரிடம் மனு..! மகன் சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

கோவை: போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை தனது மூத்த மகன் அபகரிக்க முயற்சிப்பதாக 90 வயது மூதாட்டி இன்று கோவை ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை: போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை தனது மூத்த மகன் அபகரிக்க முயற்சிப்பதாக 90 வயது மூதாட்டி இன்று கோவை ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை சிவானந்தபுரம் 3 ஆவது வீதியில் வசித்து வருபவர் ராமாத்தாள் (90). ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரபட்ட அவர் தனது இளைய மகன் சின்னராஜ் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அதில், நான் கணவர் இறந்த பிறகு இளைய மகன் சின்னராஜ் உடன் வசித்து வருகிறேன். எனக்கு விளாங்குறிச்சி பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பு பெறும், சொத்து. 

இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் கீழே விழுந்ததில், இடுப்பு பகுதி பாதிக்கப்பட்ட போது, தனது இளைய மகன் சின்னராஜ் தான் கடன் வாங்கி மருத்துவ செலவு செய்துள்ளார் எனவும் தற்போது இடது கால் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைதில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மனுவில் ராமத்தாள் தெரிவித்து இருந்தார். 

மேலும், தனது மூத்த மகன் மாணிக்கம், நோட்டரி வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம் தயாரித்து 22 பேரிடம் முன்தொகை வாங்கி உள்ளதாகவும், இடத்தை அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் தனது மூத்த மகன் மாணிக்கம் மீது நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டு தர வேண்டும், என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இவரது, இந்த மனுவை இளைய மகன் சின்னராஜ் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...