திருப்பூரில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு ஆகியவை நடத்தி 2 கோடி வரை ஏமாற்றியவர் மீது ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

கோவை: திருப்பூரில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு ஆகியவை நடத்தி 2 கோடி வரை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை: திருப்பூரில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு ஆகியவை நடத்தி 2 கோடி வரை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



திருப்பூர், அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி என்பவர் அப்பகுதியில் கடந்த 9 வருடங்களாக ஏலச் சீட்டு, பள்ளி சீட்டு, பண்டு சீட்டு மற்றும் தீபாவளி சீட்டுகள் என பலவிதமான சீட்டுகள் நடத்தி வந்துள்ளார்.

இதன் அடிப்படையில், அவர் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அவரிடம் சீட்டுக்கு சேர்ந்துள்ளனர். தவணைத் தொகைகளை சரியாக செலுத்தி வந்த சூழ்நிலையில், சீட்டு முடிந்து ஒரு மாத காலமாகியும் பணம் தராமல் இழுத்தடித்து உள்ளார்.

இது குறித்து அவர், வீட்டிற்கு பணம் செலுத்திய மக்கள் கேட்கச் சென்றபோது, அவர் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரை கண்டுபிடித்து உடனடியாக தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும், என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளனர். 

அப்பகுதியில் சுமார் 2000 பேர் வரை சீட்டு சேர்ந்துள்ளதாகவும், 2 கோடி வரை மோசடி நடந்து இருக்கும், எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...