கோவை: பொள்ளாச்சியில் வடக்கு ஒன்றிய அலுவலக அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 7 பேருக்கு இன்றும்கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள், தெரிவித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியில் வடக்கு ஒன்றிய அலுவலக அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 7 பேருக்கு இன்றும்கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள், தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி ரத்தினம் நகரை சேர்ந்த 47 வயது பெண், 21 வயது ஆண், மகாலிங்கபுரம் வாட்டர் டேங்க் அருகே எல்.ஐ.ஜி காலனியை சேர்ந்த 52 வயது ஆண், பொள்ளாச்சி ஜோதி நகர், டி.காலனி கலைமகள் ராமசாமி வீதியைச் சேர்ந்த, 45 வயது ஆண், சவுடம்மன் கோவில் அருகே சுப்பு செட்டி வீதியை சேர்ந்த 58 வயது ஆண் (கடைவீதி பேன்சி கடை ஊழியர்), பொள்ளாச்சி சின்னம்பாளையம் ராஜு நகரை சேர்ந்த 36 வயதான வடக்கு ஒன்றிய அலுவலகஅதிகாரி மற்றும் ஜமீன் ஊத்துக்குளி ராமர்கோவில் வீதியை சேர்ந்த 56 வயதான வடக்கு ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
நோய் தொற்று ஏற்பட்டுள்ள நபர்களின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள்கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும், தொற்று ஏற்பட்டுள்ள நபரின், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உறவினர்களையும் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.