மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது, சுகாதார துறையினருக்கு சவாலானது - கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கோவை: மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில், மத்திய அரசு இ-பாஸ் நடைமுறைக்கு தளர்வு அளித்திருப்பது, சுகாதாரத்துறைக்கு சவாலானது, என கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.








கோவை: மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில், மத்திய அரசு இ-பாஸ் நடைமுறைக்கு தளர்வு அளித்திருப்பது, சுகாதாரத்துறைக்கு சவாலானது, என கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எஸ் பி வேலுமணி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதுவரை, கோவை மாவட்டத்தில் 8,532 கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர், அதாவது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 78 சதவீத மக்கள் குணமடைந்து உள்ளனர்.

கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 100 மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 6,112 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதில் 1902 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 5,821 படுக்கை வசதிகள் உள்ளது. தேவையெனில், கொரோனா பரிசோதனை மற்றும் படுக்கை வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஒரிரு வாரங்களில், கொரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைன் மற்றும் குறுங்செய்தி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 25 சித்தா மருத்துவ மையங்களில் அறிகுறி இல்லாமல் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும், தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு சித்தா மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும்.

கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க இணை நோய்கள் மற்றும் பிற நோய்கள் இருப்பதே காரணம், எனவும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள், அவர்கள உடல்நிலை மிகவும் மோசமடைந்த பின், அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால், நோட்டீஸ் வழங்கப்படும், என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...