கோவையில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வந்த 13 வயது சிறுவனை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கியதாக குற்றச்சாட்டு

கோவை: கோவையில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றிய வந்த 13 வயது சிறுவனை, ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் லத்தியால் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை: கோவையில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றிய வந்த 13 வயது சிறுவனை, ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் லத்தியால் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் அடுத்த, சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவரக்ள் மணிகண்டன் பிரதிக்‌ஷா, தம்பதியினர். இவர்களது, 13 வயது மகன், தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான்.

ஞாயிற்றுக்கிழமை, தினமான இன்று தளர்வுகள் அற்ற 24 மணி நேர முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி சாலையில் ரோந்து பணியில் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்துள்ளார்.

அப்போது, நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு சக நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவனை, காவலர் ஒருவர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது, சிறுவனை விசாரித்த அவர், லத்தியால் கை, கால்களில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில், சிறுவனின் கை கால்களில் ரத்த காய தழும்புகள் ஏற்பட்டு வீங்கியுள்ளன. சிறுவன் என்று கூட பாராமல் அடித்த காவலர் யார்? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களை அடிப்பதை காவலர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் தற்போது வரை புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...