கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை, சுகாதாரத்துறை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எஸ் பி வேலுமணி திறந்து வைத்தனர்

கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை கை, கால்கள் தயாரிக்கும் மையம் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இனி விபத்தினால் கை, கால் இழந்தவர்கள் செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்த வசதி செய்யப்பட்டுள்ளது.








கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை கை, கால்கள் தயாரிக்கும் மையம் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இனி விபத்தினால் கை, கால் இழந்தவர்கள் செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட செயற்கை கை, கால்கள் தயாரிப்பு மற்றும் பொருத்தும் மையத்தை இன்று, தொடங்கி வைத்தனர்.



இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

முன்னதாக, 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கொரோனா தகவல் மற்றும் உதவி மையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், காளிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...