இனி, கோவை மக்கள் ஸ்கைப் (Skype) என்ற செயலி மூலம் மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம்

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க வருகின்றனர். இனி, அவ்வாறு வரும் பொதுமக்கள் மாநகராட்சி ஆணையாளரிடம், ஸ்கைப் (Skype) என்ற செயலி மூலமாக குறைகளை தெரிவிக்கலாம், என மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க வருகின்றனர். இனி, அவ்வாறு வரும் பொதுமக்கள் மாநகராட்சி ஆணையாளரிடம், ஸ்கைப் (Skype) என்ற செயலி மூலமாக குறைகளை தெரிவிக்கலாம், என மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வந்தது. இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமைகளில் நடந்து வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இதனை, அடுத்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வார நாட்களில் வந்து சென்று மாநகராட்சி ஆணையாளரிடம் தங்கள் குறைகள் குறித்த மனுவை அளித்து சென்றனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவல் கோவையில் வேகமாக பரவி வருவதை அடுத்து மக்கள் நேரடியாக மாநகராட்சி ஆணையாளரை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் ஸ்கைப் என்ற செயலி மூலம் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில், "குறைகளை தெரிவிக்கும் வரும் பொதுமக்கள் ஸ்கைப் செயலி மூலம் என்னை தொடர் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது," என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...