பருவ மழையால் சோலைவனமாக மாறிய டாப்சிலிப்..!

பருவ மழையால் சோலைவனமாக மாறிய டாப்சிலிப் வனப்பகுதிக்கு, சுற்றுலா தளங்களுக்கு செல்ல நீடிக்கும் தடையால் இயற்கை அழகை கண்டு ரசிக்கமுடியாத சூழல் நிலவி வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.



கோவை: பருவமழையால் சோலைவனமாக மாறிய டாப்சிலிப் வனப்பகுதிக்கு, சுற்றுலா தளங்களுக்கு செல்ல நீடிக்கும் தடையால் இயற்கை அழகை கண்டு ரசிக்கமுடியாத சூழல் நிலவி வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக, கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்களுக்கு, மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், கோவையை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஆன, ஊட்டி, வால்பாறை, டாப்சிலிப், ஏற்காடு, முதுமலை போன்ற இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.



பொள்ளாச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் மூலிகை மரங்கள், வனவிலங்குகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் டாப்சிலிப், சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும்.

இந்நிலையில், பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் பெய்த பருவமழை காரணமாக, தற்போதுபச்சைபசேல் என சோலைவனமாக மாறியுள்ளது, அப்பகுதி.



டாப்சிலிப் செல்லும் வனச்சாலைகளில் இருபுறமும் வான்உயர்ந்த, தேக்கு மரங்களும், முலிகைமரங்களும் கண்கொள்ள காட்சியாக உள்ளது. மேலும், டாப்சிலிபில் உள்ள புல்மேடு, யானை சவாரி செய்யும் இடங்கள் அனைத்தும், வெறிச்சோடி காணப்படுகிறது.



விடுமுறை நாட்களில் டாப்சிலிப் சென்று மகிழ்ந்து வந்த சுற்றுலா பயணிகள், கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள் முடப்பட்டுள்ளதால், டாப்சிலிப் வனப்பகுதியில் தற்போது உள்ள இயற்கை அழகை காண முடியாத நிலை,மனதை ஏக்கமடைய செய்திருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.



மேலும், கொரோனா காலத்தில் பணிக்கு சென்றுவிட்டு வீட்டிலே முடக்கியுள்ள மக்களுக்கு, மனரீதியான மாற்றங்களை கொண்டு வர சுற்றுலா தலங்கள் செல்ல விதித்திருக்கும்தடையில், அரசு தளர்வுகளை அறிவிக்குமா?என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...