கோவை, திருப்பூரில் உள்ள சிறு, குறு தொழில்கள் பெரும் நஷ்டமடைந்து இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் தாமதமின்றி உதவி செய்ய வேண்டும் - கோவையில் கே எஸ் அழகிரி பேட்டி

கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி 120 வாக்கு சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் கோவை மாநகர் மாவட்ட காங்கரஸ் அலுவலகத்தில், இன்று நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி 120 வாக்கு சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் கோவை மாநகர் மாவட்ட காங்கரஸ் அலுவலகத்தில், இன்று நடைபெற்றது. 



அப்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே எஸ் அழகிரிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதன் பின்னர், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொடியேற்று விழா நடைபெற்றது.



இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே எஸ் அழகிரி:

கொரொனா தொற்றால் இந்திய பொருளாதாரத்தை போலவே, தமிழக பொருளாதாரம் நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சிறு, குறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு அரசின் உதவி எந்த வகையிலும் கிடைக்கவில்லை.



மத்திய அரசு இவர்களை காக்க திட்டங்கள் ஒதுக்க வேண்டும். ஆறு மாத காலத்திற்கு வங்கிகளில் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, அவர்களால் ஒரளவு பாதிப்பில் இருந்து விடுபட முடியும். எனவே, மாநில அரசு தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி பிரதமரிடம் இது குறித்து பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு் மாவட்டம் தோறும், ஆய்வுபணிகள் நடைபெற்று வருகின்றது. தமிழகத்திற்கு எத்தனை தலைநகரங்கள் வைத்துக்கொண்டாலும், அதில் தவறில்லை.

சட்டமன்ற தேர்தலில் சீட் பங்கீடு குறித்த கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுப்போம், அதற்கு இன்னமும் கால அவகாசம் உள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது.

தருமபுரி எம்.பி. அரசு விழாவில் பங்கெடுக்க அனுமதி மறுக்கப்பட்டது, தொடர்பான கேள்விற்கு அரசு விழா, என்பது மக்கள் பங்கெடுக்கும் விழா எனவும், இதில் பங்கேற்கும் அனைவருக்கும் சோதனை செய்து தான் அனுமதிக்கப்படுகின்றதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

அரசின் தவறை மூடி மறைப்பதறகாக, முதல்வர் அரசு விழாவிற்கு வரும் போது சோதனை எடுக்க வேண்டும், என்கின்றார் எனவும் தெரிவித்தார். 

ஆயூஷ் அமைச்சக மீட்டிங்கில் அதிகாரியின் நடவடிக்கை தவறானது, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு பயத்தால், கோவையில் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது போல், நீட் தேர்வு பயத்தால் இன்னுயிரை யாரும் இழக்க கூடாது எனவும், தடையால் யாரும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள கூடாது என தெரிவித்தார்.

நீட் தேர்வு ஒரு பிரச்சினையே அல்ல எனவும் மாநில அரசு விரும்ப வில்லை என்றால், இதனை நடத்த தேவையில்லை, என ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார் எனவும் தெரிவித்தார்.

நீட் தேவையில்லை என்று மாநில அரசு, மத்திய அரசிடம் தெரிவிக்க முடியும் என கூறிய அவர், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து இல்லை என்றால் அதிமுக மக்களிடம் சென்று வாக்கு கேட்பது என்பதே சாத்தியமற்றது, என்பதை அக்கட்சி தெரிந்து கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் எம்.பி. உடல்நிலை தேறி வருவதாகவும், அவருக்காக காங்கிரஸ் கட்சியினர் 

பிரார்த்தனை செய்து வருகின்றனர் எனவும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், மோகன் குமாரமங்கலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...