திருப்பூர்: இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் ஒன்றியம் வாரியாக அரசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும், என திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள, கோட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலையை வழிபட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், செய்தியாளர்களை சந்தித்து விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
விநாயகர் சதுர்த்திக்கு குரல் கொடுத்த பாஜக மாநில தலைவர் முருகன், கொங்கு பேரவை மாநில தலைவர் ஈஸ்வரன் மற்றும் மடாதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கின்றது.
மேலும், ஜி.கே.வாசன், சரத்குமார், பாஜக தலைவர்கள் உள்ளிட்டவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்களான, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க வில்லை. இதனை, இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
நக்சலைட் சிந்தனையுள்ள அதிகாரிகள், தவறான வழிகாட்டுதல்களை அரசுக்கு தெரிவித்து, பல்வேறு இடையூறுகளை கொடுத்து வருகின்றனர். இருந்த போதிலும், இந்து முன்னணி கடுமையான போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு, கர்நாடக, மஹாராஷ்டிரா மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தவறான வழிகாட்டியாக உள்ளது. இதனை திருத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் ஒன்றியம் வாரியாக இந்துக்கள் இந்த அரசு தொடர்பாக ஆய்வு மேற்கொள்வோம்.
கடவுள் எதிர்ப்பு நிலையை, மாற்றிக் கொள்ள வேண்டும் என இந்து முன்னணி விரும்புகிறது. பல எதிர்ப்பு பிரச்சாரங்களை முறியடித்து, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இன்று மாலை, நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும். சட்டத்தை மதிப்போம், என தெரிவித்தார்.