கோவை அங்கன்வாடி மையங்கள் மூலம் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு, முட்டை, அவர்வர் வீடுகளுக்குகே சென்று வழங்கப்பட்டுள்ளது

கோவை: பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள், அங்கன்வாடி மையங்களை நம்பியே உள்ளனர்.

கோவை: பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள், அங்கன்வாடி மையங்களை நம்பியே உள்ளனர். வேலைக்கு சென்றுவிட்டு, பின்னர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்வதால் பெற்றோர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் அதில் பயிலும் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான அரிசி, பருப்பு, முட்டை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சமூக நலத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அடிப்படைக் கல்வி, சத்தான உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மேலும், பெற்றோர்களுக்கு குழந்தைகளை சுகாதாரமாக, ஆரோக்கியமாக, வளர்ப்பது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. இதில், சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் அங்கன்வாடிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக அங்கன்வாடி மையங்களில், குழந்தைகள் வந்து கல்வி பயில வேண்டாம், என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்க முடியாத சூழல் உள்ளதால், தற்போது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான அரிசி, பருப்பு, முட்டை போன்றவைகளை அங்கன்வாடி மைய ஊழியர்கள், குழந்தைகளின் வீடுகளுக்ககே நேரடியாக சென்று வழங்கியுள்ளனர்.

இது குறித்து, குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட மாவட்ட அலுவலர் மீனாட்சி கூறுகையில்:

ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்கள் கடந்த 1ம் தேதி முதல் கொடுக்கப்பட்டு வந்தது. அங்கன்வாடி மையங்களில் பயிலும், அனைத்து குழந்தைகளுக்கும் அரிசி, பருப்பு, முட்டை போன்றவை வழங்கப்பட்டுவிட்டன. கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவுகள் தங்குதடையின்றி கொடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...