கோவையில் தனியார் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து அமைப்புகள் வழிபாடு..!

கோவையில் தனியார் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து அமைப்புகள் வழிபாடு.

கோவை: கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை உள்ளதால் கோவையில் தனியார் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள், பல்வேறு பொது இடங்களில்பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்தஉத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. 

இதன் காரணமாக, கோவையில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தனியார் இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இதன்படி, தேர்முட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இந்து மக்கள் கட்சி சார்பில், கணபதி ஹோமத்துடன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில், பூசணிக்காயில் கொரானா வைரஸ்உருவம் பொறிக்கப்பட்டு, அதனை விநாயகர் வேல்கொண்டு வதம் செய்யும் வகையில் ஒரு விநாயகர் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 



இது குறித்து, இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில்: 

தமிழக அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து, கோவையில் 32 தனியார் இடங்களில், இந்து மக்கள் கட்சி சார்பாக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 

சிலைகளை மாலை 3 மணி அளவில் கூட்டம் சேராமல் குறைந்த நபர்களைக் கொண்டுநீர்நிலைகளில் கரைக்க உள்ளதாகவும், கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...