பொள்ளாச்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் மீட்பு..!

கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய குடியிருப்புகள் உருவாகும்போது, பூங்காவிற்கு என இடம் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், அவ்வாறு, பூங்காவிற்கு அல்லது இணைப்பு பாதை ஏற்படுத்த ஒதுக்கப்படும் நிலங்கள், போதிய பராமரிப்பு இல்லாததால், ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.







கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய குடியிருப்புகள் உருவாகும்போது, பூங்காவிற்கு என இடம் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், அவ்வாறு, பூங்காவிற்கு அல்லது இணைப்பு பாதை ஏற்படுத்த ஒதுக்கப்படும் நிலங்கள், போதிய பராமரிப்பு இல்லாததால், ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. 

இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது. அப்போது, நகராட்சிக்கு சொந்தமான பல்லடம் ரோடு ரத்தினசபாபதி புறத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவில் உள்ள, 27.8 சென்ட் இடம், தனியாரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது, தெரியவந்தது. 

இதை, இறகுபந்து மைதானமாகவும், உடற்பயிற்சி செய்யும் இடமாகவும், சிலர் பயன்படுத்தி வந்துள்ளனர். பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை ஒப்படைக்க உரிய முறையில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது என்று நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு கோடி மதிப்புள்ள அந்த இடம் இன்று நகராட்சி அலுவலர்களால் மீட்கப்பட்டு, இது நகராட்சி பூங்கா அமைக்கப்படவுள்ள இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், இது போன்ற ஆக்கிரமிப்புகள் நடப்பதாகவும், இனியும் தாமதிக்காமல், நகராட்சி உடனடியாக அங்கு பூங்கா அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும், என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

அதன்படி, பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...