உதகை நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு அளவீடு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் கைது!

நீலகிரி: உதகை நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு அளவீடு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.







நீலகிரி: உதகை நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு அளவீடு செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். 

மலை மாவட்டமான நீலகிரியில் மாவட்டத்தில் உள்ள உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய வீடுகள் கட்டுவது சம்பந்தமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வரும் நிலையில், உதகை நகராட்சிக்குட்பட்ட தீட்டுக்கள் பகுதியில் வசித்து வரும் பிரபு என்பவர் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு வீடு ஒன்றை கட்டியுள்ளார். 

அந்த வீட்டிற்கு நகராட்சி சார்பில் நில அளவீடு செய்ய நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் சத்திய ஆரோக்கிய நாதன் என்பவர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். 

இதைத்தொடர்ந்து, பிரபு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பிரபு இன்று மாலை வருவாய் உதவி ஆய்வாளர் சத்திய ஆரோக்கிய நாதனிடம் ரூபாய் 15 ஆயிரம் லஞ்ச பணத்தை வழங்கினார்.

அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சத்திய ஆரோக்கியநாதன் உதகை நகராட்சிக்குட்பட்ட பல வீடுகளுக்கு நில அளவீடு செய்ய இது போன்று பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...