சென்னை: மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஜூலை போன்று, ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், பால், மருந்துக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை செயல்படாது. போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவ உபகரணங்கள், உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், விவசாயங்கள், வேளாண் பதப்படுத்துதல் மற்றும் தோட்டங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனங்களின் உற்பத்தியாளர்கள், பாதுகாப்பு மற்றும் அனைத்து ஏற்றுமதித் தொழில்களுக்கு இனிவரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.