பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சென்னை: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலையில் கவலைக்கிடமானதால், அவருக்கு வெண்டிலேட்டர் சுவாசத்துடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றமும், மீண்டும் கவலைக்கிடமாகவும் என மாறி வருகிறது.

இதனிடையே, கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது சீரான முறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ, செயற்கை சுவாசம் ஆகியவற்றின் மூலம் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...