கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டதாகவும், புதிய கல்விக் கொள்கை, சமூக நீதிக்கு எதிரானது என்று, பொள்ளாச்சியில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.
கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டதாகவும், புதிய கல்விக் கொள்கை, சமூக நீதிக்கு எதிரானது என்று, பொள்ளாச்சியில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.
பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று, ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசியபோது, உலகில் இரண்டாவது பெரிய ரயில்வே துறையான இந்திய ரயில்வே லாபகரமாக நடந்து கொண்டிருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் பயணித்து வரும் ரயில்வே துறையை தனியார்மயமாக்கினால் வண்ணமயமான ரயில் இயக்கப்படுமே தவிர, கட்டணம் என்பது 25 முதல் 30 விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், மத்திய, மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும், சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் நோய்த்தொற்று கிராமப்புறம் வரை பரவியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், புதிய கல்விக் கொள்கை சம தர்மத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இடை நில்லா கல்வியை கொண்டு வந்ததால், கிராமப்புற பெண்கள், பதினொன்றாம் வகுப்பு வரை சென்று படித்து பயன் பெற்றதாக தெரிவித்தார்.
ஆகவே, புதிய கல்விக் கொள்கை உயர் நிலையில் உள்ளவர்களுக்கும், உயர்ந்த வகுப்பை சேர்ந்தவர்களுக்கும், வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுமே தவிர, நடுத்தர மக்களுக்கு இந்த புதிய கல்விக் கொள்கை பயன்படாது என்று தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் போலவே சட்டமன்றத்திலும், திமுக, தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்தார்.
திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தென்னரசு, தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர், மோகன் குமாரமங்கலம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காளிமுத்து (எம்எல்ஏ தாராபுரம்) ஆகியோர் உடனிருந்தனர்.