கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊடகவியாளர்கள் பல்வேறு இடங்களுக்கு செய்தி சேகரிக்க சென்று வருவதால், அவர்களுக்கு தகுந்த இடைவெளியில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவையில் மட்டும் 300கும் மேற்பட்ட ஊடகவியாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றார். கொரோனா தொற்று ஊரடங்கு காலகட்டங்களில் செய்தி சேகரிக்கும் பணியில் பலர் ஈடுபட்டு இருந்த நிலையில் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

இந்நிலையில், ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனை தொடர்ந்து, ஊடகவியலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யபட்டது. மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் உத்தரவின் பேரில் இன்று பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டது. காலை 10 மணிக்கு முகாம் துவங்கிய நிலையில் பத்திரிகைகளில் பணியாற்றுபவர்கள் பலர் பரிசோதனைகள் செய்து கொண்டனர். மேலும், அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கபசுர குடிநீர், ஜின்க் மற்றும் ஆர்சானிக் மாத்திரைகள் வழங்கபட்டது.

மதியம் இரண்டு மணி வரை இந்த முகாம் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.