மேட்டுப்பாளையத்தில் நிலச்சரிவு மேலாண்மை மையம் அமைக்க வேண்டும் - பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

கோவை: மேட்டுப்பாளையத்தில் நிலச்சரிவு மேலாண்மை மையம் அமைக்க வேண்டும், என பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் நிலச்சரிவு மேலாண்மை மையம் அமைக்க வேண்டும், என பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், அதில் கூறியிருப்பதாவது: 

கேரளா, மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலரை தேடும் பணி நடந்து வருகிறது. இடுக்கியை பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக காடுகளை அழித்து தொடர்ந்து தேயிலை, காப்பி போன்ற பணப்பயிர்களை விளைவித்ததன் காரணமாக மண்ணின் உறுதி தன்மை இழந்தவிட்டாதாக, அந்த பகுதியில் ஆய்வு செய்த நிபுணர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

காடழிப்பு மட்டுமல்லாமல், ஒற்றை பயிரிடும் முறை, சுரங்க பணிகள், அணைக்கட்டுகள், நெடுஞ்சாலை பணிகளின், விளைவாக மண்ணின் உறுதி தன்மை இழந்து இருக்கிறது. நிலம் வலுவிழப்பதை தொடர் காடழிப்புடனும், நிலச்சரிவைப் பெரும் மழையுடனும், பெரும் மழையைக் காலநிலை மாற்றத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்க நாம் தவறி விட்டோம். அதன் விளைவே இத்தனை உயிரிகளை காவு வாங்குகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திலும், நிலச்சரிவுகள் ஏற்படுவது உண்டு. எனவே, அதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக எடுக்க வேண்டும். எனவே மேட்டுப்பாளையத்தில் மாநில நிலச்சரிவு மேலாண்மை அமைத்திட, பூவுலகின் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் .

மேலும், தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005கீழ், நிலச்சரிவுகளுக்கான வழிகாட்டுதல்கள் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. அதன்படி, ஆறு துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்த முன்னெடுப்புகளில், வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதில், பல போதாமைகள் உள்ளன.

நிலச்சரிவுகளைக் கையாள பேரிடர் ஆணையம் வெளியிட்டுள்ள உத்திகள் (published strategies):

1. நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து மண்டலங்களாகப் பிரித்தல்.

2. நிலச்சரிவுகளைக் கண்காணித்து, முன்னரே எச்சரிக்கும் கட்டமைப்புகளை உருவாக்குதல்- monitoring and early warning systems.

3. நிலச்சரிவுகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுத்தல்.

4. திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்துதல்.

5. மலைகளுக்கு ஏற்ற நிலப் பயன்பாட்டு மண்டலங்களைப் பிரித்து அவற்றிற்கான ஒழுங்குமுறைகளையும், கொள்கைகளையும் வகுத்தல்.

6. நிலச்சரிவுகள் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்க தனியான சிறப்புக் குழுக்களை அமைத்தல் (special purpose vehicle)

மேல்குறிப்பிட்ட விசயங்கள் எல்லாம் இன்னும் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றை உடனடியாக நடைமுறைப் படுத்தவேண்டும்.

இதில் தமிழகம் செய்யவேண்டியவை:-

1. மேற்கு மலைகள் தொடர்பாக மாதவ் காட்கில் குழு கொடுத்த பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தவேண்டும்.

2. கடந்த வருடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் அதிகமானவை நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளன; நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளப் பகுதிகள் என, ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள 250க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள கேளிக்கை விடுதிகள், வணிக வளாகங்கள் காலிசெய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படவேண்டும். மேலும் குறிப்பிட்ட அந்த இடங்களில் புதிதாக எந்தவிதமான கட்டுமானங்களையும் அனுமதிக்கக்கூடாது.

3. அயல் தாவரங்களை கட்டுப்படுத்தி, அந்த மலைகளுக்கு உரிய இயல் தாவரங்களை மீட்ருவாக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

4. வருடா வருடம் உதகையில் நடைபெறும் மலர் கண்காட்சியை மேட்டுப்பாளையம் அல்லது பொள்ளாச்சிக்கு மாற்றவேண்டும். சுமார் 25-30 வருடங்களுக்கு முன்னர், உதகையை சுற்றுலா தலமாக பிரபலப்படுத்த இத்தகைய விழாக்கள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது குறிப்பிட்ட அந்த ஒரு வார காலத்திற்கு மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் உதகையில் கூடுகிறார்கள், அம்மலைகளுக்கு அது மிகப்பெரிய அழுத்தமாக அமைகிறது.

5. தமிழகப் பகுதியில், மேற்கு மலைகளில் உத்தேசிக்கப்பட்ட நியூட்ரினோ ஆய்வகம் உள்ளீட்ட அனைத்து திட்டங்களையும் கைவிடவேண்டும். மற்ற பல திட்டங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். செயல்பட்டு கொண்டிருக்கும் நீர்மின் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டங்களையும் கைவிடவேண்டும்.

6. நீலகிரியில் நிலச்சசரிவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கக்கூடிய வகையிலும் ‘மாநில நிலச்சரிவு மேலாண்மை மையம்’ மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்படவேண்டும். (Landslide Management Centre), அதன் மற்றொரு மையம் வத்தலகுண்டுவில் அமைக்கப்படவேண்டும். இந்த மையத்தில் விஞ்ஞானிகள் மட்டுமில்லாமல் அந்த மலையின் ‘பூர்வகுடிகளை’ உள்ளடக்கிய நிபுணர்கள் குழு அமைக்கப்படவேண்டும்.

7. காலநிலை மாற்றத்தால் தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகளைக் கையாள மாநில அளவிலான “தமிழகக் காலநிலை மையம்” அமைக்கப்படவேண்டும்.

8. மேற்கு மலைகள் முழுவதும் இயற்கை வழியிலான விவசாய முறைகளைக் கட்டாயமாக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நமக்கு எல்லா வளங்களையும் அளித்து நம்மைப் பாதுகாத்த மண் இப்போது நம்மை காவுவாங்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இயற்கை காரணமல்ல, நாம் மட்டுமே காரணம். இம்மண்ணின் மீது நாம் நிகழ்த்திய வன்முறைக்கான எதிர்வினையை இப்போது நாம் அனுபவிக்கிறோம். 

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...