பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, வேட்டைகாரன்புதூர் கால்வாய், உள்ளிட்ட கால்வாய்கள் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, வேட்டைகாரன்புதூர் கால்வாய், உள்ளிட்ட கால்வாய்கள் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது.
இதில், ஆழியார் புதிய ஆயக்கட்டு பகுதியில் 44 ஆயிரத்து 380 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இங்கு, பெரும்பாலும் தென்னைசாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர, மானாவாரி பயிரான
மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும், ஆழியார் அணையில் இருந்து அக்டோபர் மாதம் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கு தண்ணீர் திறப்பது குறித்து புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் ஆனைமலையில் நடைபெற்றது.

பாசன சபை தலைவர், அசோக்குமார் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில், பாசன சபை செயலாளர் செந்தில், துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த சில வருடங்களாக, பிஏபி திட்டத்தில் உள்ள மற்ற பாசன பகுதிகளுக்கு, தண்ணீர் திறந்து விட்ட பின்னர் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், தொடர்ந்து புதிய ஆயக்கட்டு விவசாயிகளை புறக்கணிக்கும் நோக்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடப்பது வேதனை அளிப்பதாகவும், நீர் பகிர்மான ஒப்பந்தத்தை மீறி கேரள அரசு சிறுவாணி அணையை கைக்குள் வைத்துக்கொண்டு, ஆழியார் அணையில் இருந்து கேரளாவிற்கு கூடுதல் தண்ணீர் பெற வற்புறுத்தி வருகிறது, என்று குற்றம் சாட்டினார்.
இதில், தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து பாசன சபை நிர்வாகிகள் கூறுகையில், "ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல், 90 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு அரசு தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 75 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கடைமடை வரை தண்ணீர் கிடைக்காமல் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தண்ணீர் திறப்பது குறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட பின்னர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும், என்று தெரிவித்தார்.
மேலும், நடப்பாண்டு 90 நாட்கள் முழுமையாக தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.