பாடகர் எஸ்.பி.பி நலம் பெற வேண்டி, கோவையில் இசை கச்சேரி குழுவினர் அவர் பாடல்களை பாடினர்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலம் பெற வேண்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விரைவில் கொரோனா நலம் பெற வேண்டி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

பாடகர், இசை அமைப்பாளர், நடிகர்,. பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்து உள்ளிட்ட 16 மொழிகளில் 40,000கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், அவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையிலுள்ள எம் ஜி எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக, சேர்க்கப்பட்டார். 

கடந்த, சனிக்கிழமை இரவு அவரதுஉடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவருக்கு, வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. 

தொடர்ந்து அவர் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், 

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூரண குணமடைய வேண்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கூட்டு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது.

சென்னை, கோவை,

தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பி.பி பாடிய பாடல்களை கூட்டு பிராத்தனையின் பொது ஒலிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ராஜ் மெலோடிஸ் இசை கச்சேரி குழுவினர் தொடர் பாடல்களை பாடினர். மாலை 6 மணிக்கு பாடல்களை பாட துவங்கிய இக்குழுவினர், தொடர்ந்து ஒரு மணி நேரம் எஸ்.பி.பி பாடிய பாடல்களை இடைவிடாது பாடினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் மெலடீஸ் இசை குழுவின் ஒருங்கிணைபாளர் ராஜன் கூறுகையில், எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பெரும்பாலான இசை கச்சேரிகளில் 75% பாடல்கள் அவர் பாடிய பாடல்கள் தான் பாடப்பட்டு வருகிறது, என கூறினார்.

இந்த கூட்டு பிராத்தனைக்கு இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்திருந்த நிலையில், எஸ்.பி.பி பாடிய பாடலை ஒலிக்கவிட்டு ரஜினி, கமல், ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, வைரமுத்து, உள்ளிட்ட திரையுலகினர் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...