கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறதா? தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விளக்கம்

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என அண்மையில் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என அண்மையில் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. 

இது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை, சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 துாண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 



இதேபோல, ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில், சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. ஒர் ஆண்டு ஆகியும் கூட பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதால் மக்கள் மிகவும் சீரமம் அடைந்துள்ளனர்.

ஊரடங்கால் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்ட போதிலும் தளர்வுகள் அளித்ததை அடுத்து, மீண்டும் தற்போது மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இந்த மேம்பாலங்கள், கட்டி முடிக்கப்பட்டால், அதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை, 70 சதவீதமாகவும், மேம்பாளதிற்கு கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை, 30 சதவீதமாகவும் இருக்கும். 

இதனால், குறிப்பிட்ட இரண்டு பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி கணிசமாக குறையும்.

இதனிடையே, மேம்பால பணிகள் காரணமாக, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மேம்பால பணிகள் பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து மேம்பால பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, போக்குவரத்தில் மாற்றம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

போக்குவரத்து மாற்றத்தினால், மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் மாற்றம் மேற்கொள்ள, ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: 

‘தற்போது கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள், கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் நடந்து வருகிறது. ஒவ்வொரு தூண்களுக்கும் இடையே 25 மீட்டர் இடைவெளி உள்ளது. தூண்களின் மேல், பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. வரும் நாட்களில், இந்த பணிகள் தீவிரம் அடையும் போது, போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்க முடியாமல் போக்குவரத்து மாற்றம் செய்ய நேரிடும்.

மேம்பால பணிகளை விரைந்து முடிக்க போக்குவரத்து மாற்றம் அவசியம். எனவே, இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் உள்ளிட்டோரிடம் அனுமதி கேட்டுள்ளோம். மேலும், போக்குவரத்து மாற்றம் ஏற்பட்டால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வருவதற்கு, துடியலூர் சிக்னலில் இருந்து இடதுபுறம் திரும்பி வெள்ளகிணறு, நல்லாம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம். 

மேலும், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வோர், அவினாசிலிங்கம் பல்கலைகழகம் சிக்னல் அருகே இடதுபுறம் திரும்பி ஜி.சி.டி கல்லூரி வழியாக தடாகம் சாலையை அடைந்து கணுவாய், பன்னிமடை, வடமதுரை வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.

தற்போது, வரை போக்குவரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அப்படி, செய்யப்படும் பட்சத்தில் கவுண்டம்பாளையம் வழியாக இருசக்கர வாகனங்கள் சென்று வர மட்டும் அனுமதிக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...