கோவை அருகே நடிகர் வடிவேல் பாணியில் நூதன முறையில் அரிசி கடை உரிமையாளரை ஏமாற்றி திருட்டு..!

கோவை: கோவை அருகே நடிகர் வடிவேல் பாணியில் நூதன முறையில் கடை உரிமையாளரை ஏமாற்றி அரிசி மூட்டையை ஒருவர் திருடிச் சென்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அருகே நடிகர் வடிவேல் பாணியில் நூதன முறையில் கடை உரிமையாளரை ஏமாற்றி அரிசி மூட்டையை ஒருவர் திருடிச் சென்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சூலூர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (47). இவர் ரங்கநாதபுரம் பகுதியில் சொந்தமாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தினமும் அருகிலுள்ள பவுண்டரிக்கு வேலைக்குச் செல்வதால், இவரது மனைவி லலிதா (40) மகன் அசோக் குமார் ஆகியோர் அரிசி கடையை பகல் நேரங்களில் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, இவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர் தனக்கு அரிசி தேவை எனக்கூறி செந்தில்குமாரை அழைத்துக் கொண்டு கடை வந்துள்ளார். 

அங்கு வந்தவுடன் தனக்கு 5 மூட்டை அரிசி தேவை எனவும் அரிசி மூட்டையை தனது வீட்டுக்கு கொண்டு வந்து தருமாறும், அங்கு வந்து அதற்கான தொகையை பெற்று செல்லுமாறு கேட்டுள்ளார். இதை நம்பி, அந்நபரின் வண்டியில் இரண்டு மூட்டை அரிசி ஏற்றி விட்டு, மேலும் மூன்று மூட்டையை தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு, அசோக் குமார் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது, இரண்டு மூட்டை ஏற்றிய நிலையில், அடையாளம் தெரியாத அந்த நபர், தனது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரைத் துரத்திச் சென்ற செந்தில்குமார், எங்கேயும் காணாது திகைத்து நின்ற போது, தான் அவர் ஏமாற்றப்பட்டது, செந்தில்குமாருக்கு தெரியவந்துள்ளது. 

இப்படி, சினிமா பட பாணியில் அரிசி கடையில் நூதனமான வகையில் திருடி சென்ற சம்பவம் குறித்து, சூலூர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்தார். 

அப்போது, அங்கு வந்த காவல் துறையினர், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...