கோவை: இந்திய விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 249வது நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 249வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை வடகோவையில் உள்ள ஆதி தமிழர் பேரவை அலுவலகத்தில் விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான் மற்றும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அதியமான் கூறுகையில், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளை பல்வேறு இடங்களில் கடைபிடித்து வருவதாகவும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட ஒண்டிவீரனுக்கு திமுக ஆட்சியில் மணிமண்டபம் அடிக்கல் நடப்பட்டு இன்று நினைவு மண்டபமாக விளங்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஒண்டிவீரனின் நினைவு நாளை அரசு விழாவாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மத்திய அரசு தபால் தலை வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.