கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதுவதற்கு பயந்து சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் நீட் தேர்வு எழுதுவதற்கு பயந்து சுபஸ்ரீ என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு எழுதுவதற்கு பயந்து கோவை அரசு பெரும் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி நேற்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், தமிழகத்தில் அனிதாவை போன்று சுபஸ்ரீ உயிரிழந்துள்ளார் எனவும் இனிமேலாவது இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல, ட்விட்டரிலும் சுபஸ்ரீக்கு ஆதரவாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பலரும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.