கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப் பகுதியில் வனத்துறை சார்பில் 28 யானைகள் வளர்ப்பு முகாம்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள யானைகள் முகாமில், இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது, டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் 23 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஐந்து யானைகள் வரகளியாறு பயிற்சி முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அங்கு பராமரிக்கப்படும் கும்கி யானைகலான, கலீம், வெங்கடேஷ், மாரியப்பன், பரணி, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை விரட்ட பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகளுக்கு யானை சவாரிகாகவும், இங்குள்ள வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கோழிகமுத்தி யானைகள் முகாமில், அணிவகுத்து நிற்கும் யானைகளைப் பார்க்க சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில், சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்புக்காக யானைகள் நிற்கும் இடங்களில் பல ஆண்டுகளாக மரக்கட்டைகளை வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இப்போது, இதை முற்றிலுமாக மாற்றி இரும்புக் கம்பிகளைக் கொண்டு கான்கிரீட் தூண்கள் அமைத்து புதுப்பிக்க வனத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.
தற்போது, ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் இரும்புக் கம்பிகளைக் கொண்டு தடுப்பு அமைக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் இந்த பணி முடிவடையும், என வனத்துறையினர் தெரிவித்தனர்.