முக கவசம் எங்கே..? மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகியை கண்டித்த கோவை மாவட்ட ஆட்சியர்

முக கவசம் எங்கே..? மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகியை கண்டித்த கோவை மாவட்ட ஆட்சியர்.

கோவை; கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் இயங்கி வந்த பழைய பேருந்து நிலையம் பழுதடைந்த காரணமாக, அதை இடிக்கபட்டு நான்கு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேற்று, ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பேருந்து நிலையத் திறப்பு விழா குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியரிடம், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலை விவகாரம் தொடர்பான மனுவை, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கம், அளிக்க வந்தார்.



முககவசம் அணியாமல், மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவரிடம், முககவசம் எங்கே..? என ஆட்சியர் வினவியபோது, காரில் வைத்துவிட்டு வந்தகாக கூறினார்.



கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு, இறந்து வரும் சூழலில், இப்படி முக கவசம் அணியாமல்வரலாமா..? என ஆட்சித்தலைவர் அவரை கண்டித்தார். அதை, தொடர்ந்து, அவர் முககவசத்தை அணிந்து வந்து, விநாயகர் சிலை அகற்றம் குறித்த மனுவை அளித்தார்.

மனுவை பெற்ற ஆட்சியர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...