பொள்ளாச்சியில் தனியார் மருத்துவர், 3 சிறுவர்கள் உள்பட 16 பேருக்கு நோய் தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மட்டும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மூன்று சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி, செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று மட்டும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மூன்று சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி, செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொள்ளாச்சியில், மாக்கினாம்பட்டி பகுதியில் 2 வயது ஆண் குழந்தை, 4 வயது பெண் குழந்தை, 65 வயது மூதாட்டி, 65 வயது முதியவர், 67 வயது முதியவர், சின்னாம்பாளையம் பகுதியில் 50 வயது பெண், 48 வயது, ஆண் 76 வயது மூதாட்டி, 30 வயது பெண், 35 வயது பெண், 8 வயது சிறுமி. பொள்ளாச்சி சாலமன் வீதியில் 40 வயது ஆண், சின்னாம்பாளையம் காமாட்சி நகரில் 49 வயது ஆண். குருமபாளையம் பகுதியில் 30 வயது தனியார் மருத்துவர். மேலும் பொள்ளாச்சி திலகர் வீதியைச் சேர்ந்த 55 வயது வாழை இலை வியாபாரி, என இன்று ஒரே நாளில் 16 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், பொள்ளாச்சி திலகர் வீதியைச் சேர்ந்த 55 வயது வாழை இலை வியாபாரி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர், கடந்த 10 ஆம் தேதி முதல், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய் பாதிக்கப்பட்டவர்களின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கிருமிநாசினி தெலிக்கபட்டு வருகின்றது. மேலும், பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரிப்பதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்று வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...