கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் கேம்பஸ் ஃபரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் கேம்பஸ் ஃபரண்ட் ஆப் இந்தியா மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் நீட் தேர்விற்காக தயாராகி வந்த சுபஸ்ரீ என்ற 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் தமிழக மக்களையும் தமிழக மாணவர்களையும் திட்டமிட்டு வஞ்சித்து வருவதாகவும் அதன் அடிப்படையில் மாணவர்கள் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் தான் மருத்துவ படிப்பு படிப்பதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் என்ற நுழைவு தேர்வு எனவும் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக ஆகக்கூடாது என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட இதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உக்கடம் பேருந்து நிலையம் அருகில் கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், பல மாணவர்கள் போதிய அளவு கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறாததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இன்றளவும் தமிழகத்தில் உள்ள மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்களின் ஒருமித்த கருத்து சமூக நீதிக்கு எதிராக உள்ள நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே.
எனவே, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் கொள்கை முடிவெடுத்து நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உயிர்பலி வாங்கும் NEET தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இனி ஒருபோதும் NEET தேர்வின் காரணமாக மாணவர்களின் உயிர் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது என இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.