கோவை: பொள்ளாச்சி அருகே பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணியை ஆட்டோவில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், வலி அதிகரித்ததால், அவருக்கு ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த செவிலியர்களை மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்த கொள்ளுபாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில், ரஜினி என்பவரது மனைவி சினேகா, நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேற்று பிரசவவலி ஏற்பட்டதன் காரணமாக கோலார்பட்டி மருத்துவமனை செல்வதற்கு ஆட்டோ வரவழைக்கப்பட்டது.

ஆட்டோவில், அவரை மற்றும் அவரது உறவினர்களை அழைத்து செல்லும் வழியில், சினேகாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது பின், கோலார்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆட்டோவிலேயே செவிலியர்கள், சினேகாவிற்க்கு பிரசவம் பார்த்தனர். பிறந்
சற்று நேரத்தில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, கோலார்பட்டி அரசு மருத்துவமனையில், தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரசவ வலியில் இருந்த பெண்ணை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ ஒட்டுனர் மற்றும் பிரசவம் பார்த்த செவிலியருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.