கோவை: கோவையில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் எவ்வித விசாரணையுமின்றி பெண்ணின் மரணத்திற்கு திமுகவினர் நீட் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்தார்.
கோவை: கோவையில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் எவ்வித விசாரணையுமின்றி பெண்ணின் மரணத்திற்கு திமுகவினர் நீட் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே மூப்பனார் பிறந்த நாளான இன்று கோவை ஆடிஸ் வீதியில் உள்ள மூப்பனார் பவன் அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டதுடன் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன் பின்னர் புதியதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய பின்னர் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்த நிலையில், மத்திய மாநில அரசுகளின் துரித நடவடிக்கையால் இந்தியாவில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தேவையற்ற விதத்தில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அறிக்கை விட்டு வருவதாகவும் நோயை வைத்து அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
கோவையில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சூழலில், என்ன காரணம் என்றே தெரியாமல் அதற்கு திமுகவினர் நீட் சாயம் பூசி வருவதாகவும் ஏற்கனவே அனிதா மரணத்தின் போது பல போராட்டங்களை நடத்திய திமுகவினர் நீட் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் பேசவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், ஸ்டெர்லைட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனவும் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டி விகிதத்தை மேலும் நான்கு மாதத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.