கோவை: கோவை பொள்ளாச்சி அருகே பழங்குடி மாணவர்களுக்கு பாலிடெக்னிக் மாணவன் கல்வி கற்று தரும் சம்பவம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கொரோனா ஊரடங்கால் கல்வியை தொடர முடியாத சூழ்நிலையில், பல மாணவர்கள் கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக பழங்குடி கிராமத்தில் அதிகமாக உள்ளது.
ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து கல்வி கற்றுக்கொடுக்கும் நிலையில், பொள்ளாச்சி ஊராட்சியில் பங்களா மேடு, காக்கா கொத்திபாறை, நரிக்கல்பதி, எட்டித்துறை, செல்லப்பிள்ளைகரடு, வெப்பரைப்பதி ஆகிய பழங்குடி கிராமங்களில் இது போன்ற வசதி இல்லை.
இதில் வெப்பரைப்பதி பழங்குடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வருபவர்கள். இங்கிருக்கும் மலைவாழ் மாணவர்கள் 5 கிலோமீட்டர் நடைபயணமாக ஆனைமலை, காளியாபுரத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் இவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விட்டது. மின்சார வசதி இல்லாத கிராமப்புறங்களில் மொபைல் போன் என்பது எட்டாக் கனியாக தான் உள்ளது. அந்த வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஆன்லைன் கல்வி என்பது எப்படி அவர்களுக்கு சாத்தியமாகும்.
இந்நிலையில், நாம் கற்ற கல்வியை அடுத்தவருக்கு கற்றுக்கொடுத்தால் அதை விட வேற எந்த செயலும் இருக்க முடியாது என்கிறார் பொள்ளாச்சி வெப்பரைப்பதி பகுதியை சார்ந்த பாலிடெக்னிக் மாணவன் கனகசபாபதி. இளமையில் கல்வி பயிலாததது உலகில் மிகப்பெரிய கொடுமை ஆகும். ஊரடங்கு காலம் என்பதால் மாணவர்கள் அவர்களின் தாயுடன் சேர்ந்து காட்டு வேலை, கூலி வேலைக்கு எல்லாம் செல்கின்றனர்.
இதனால், என் வீட்டிலேயே பாடம் எடுக்க ஆரம்பித்தேன். முதலில் குறைந்த மாணவர்கள் மட்டுமே வந்தனர். அதன் பிறகு பெற்றோர்களே அவர்களின் பிள்ளைகளை கொண்டு வந்து சேர்த்தனர்.

தினமும் காலை முதல் மாலை வரை வாரத்தில் 5 நாட்களும் 1 முதல் 9ம் வகுப்பு வரை 4 மாதங்களாக எனது வீட்டிலேயே பாடங்களை சொல்லிக் கொடுக்கிறேன்.
இதில் புத்தகங்கள் கொடுப்பதற்கு முன் பழைய புத்தகங்கள் அல்லது pdf வாயிலாக அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தேன். முதலில் நான் படித்து பாடங்களை தெளிவுபடுத்திய பிறகு அவர்களுக்கு கற்பிக்கிறேன். என்னுடன் படித்த நண்பர்கள் அவரவர் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து வருகிறார்கள். மலைவாழ் மாணவர்களை அரசாங்க பணியில் பணியாற்றவைக்கும் வரை அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார்.
மேலும், விடுமுறை நாட்களில் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று அவர்களின் உதவியுடன் உணவு கொடுத்து வருகிறார்.
விடுமுறை காலம் என்பதால் கிரிக்கெட், மொபைல் என பெற்றோர்களின் சம்பாத்தியத்தில் காலத்தை தள்ளி கொண்டிருக்கும் இளம் சமுதாயத்தின் மத்தியில் இவரது பணி அனைவராலும் பாராட்டுதற்குரியதாகும்.
நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஸ்மார்ட் போன், லேப்டாப் மூலம் ஆன்லைன் கல்வியை பயின்று வருகிறார்கள். ஆனால் இல்லாத பட்டவர்களுக்கு அடிப்படை கல்வியே கேள்விக்குறியாக உள்ளது. இந்த சமுதாயத்தில் நாம் கற்ற கல்வி நமக்கு பயன்படுதோ இல்லையோ மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும், அதுவே உலக நியதி.