கோவை: திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன் பாளையம், காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மின்ஹாஜூதீன்.30 வயதான, இவர் கொரோனா அறிகுறி காரணமாக நேற்று காலை 9.30 மணியளவில் கோவை அரசு மருத்தவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
கோவை: திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன் பாளையம், காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மின்ஹாஜூதீன் (30). இவர் கொரோனா அறிகுறி காரணமாக நேற்று காலை 9.30 மணியளவில் கோவை அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நேற்று பிற்பகல் இவர் உடல்நிலை மோசமானதையடுத்து, இன்று 2.55 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொள்ளாச்சி ஆனைமலை தான், அவருக்கு சொந்த ஊர் என்றாலும், இவரது உடலை கோவையிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, கோவை பூமார்க்கெட் ஹைதர் அலி திப்புசுல்த்தான் மயானத்தில் அவரது உடல் இன்று இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

தமுமுகவினர் இவரது உடலை, முழுகவசங்கள் அணிந்தபடி பாதுகாப்பாக அடக்கம் செய்தனர்.

காவல் துறையில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்தால், 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க மின்ஹாஜூதீன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2013ம் ஆண்டு பணியில் சேர்ந்த மின்ஹாஜூதீனுக்கு நிஷாபர்வீன் என்ற மனைவியும், முபாஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது.